முன்னணி குற்றவாளி மற்றும் போதைப் பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷ் மற்றும் அவருடைய சகாக்களை, கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டன என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
அதன் பெறுபேறாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்துக்கு இன்று (07) விஜயம் செய்திருந்த அவர், அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாக பொலிஸ் சேவைகள் சுயாதீனப்படுத்தப்பட்டது. அதனூடாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகள், வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய வசதிகளை மேம்படுத்தியமையால், இவ்வாறு தலைமறைவாகியிருந்த மிகமுக்கியமான குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.