ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணி , இம்முறை டெலிபோன் சின்னத்தில், போட்டியிடவுள்ளது.
இதற்கான வேட்புமனுக்களும் தாக்கல் செய்துவிட்டன.
இந்நிலையில், சில வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பெயரை கெடுக்கும் வகையிலேயே செயற்பட்டுகொண்டிருக்கின்றனர். இது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பெரும் தலையிடியாகவே உள்ளது.
கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டிய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஊரடங்கு சட்ட நேரத்தில், சூத்தாட்டத்தில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டார்.
இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நலின் பண்டாரவுக்கு சொந்தமான குளியாப்பிட்டியிலுள்ள வீட்டிலிருந்து ஒருதொகை கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் ஐக்கிய மக்கள் சக்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடாவே அமையும் என்றும் சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமானவர்கள் காதுக்கு ஊதியுள்ளனர் என அறியமுடிகின்றது.