மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக, நாட்டை ஓரளவுக்கு திறந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், 21 மாவட்டங்களும் நாளை (11) முதல் திறக்கப்படும்.
ஒன்றரை மாதங்களுக்கு பின்னர், மேல்மாகாண மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
வரையறைகள் தளர்த்தப்படும் போது கொரோனா நோயாளர்கள் சிக்குவார்களாயின், அந்தப் பிரதேசத்துக்கு மட்டுமே ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான பிரதேசங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருப்பவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, தற்போது அமுலில் இருக்கும் மாலை 8 மணிமுதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு சட்டத்தையும் ஏனைய மாவட்டங்களில் முற்றாக தளர்த்தி விடுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.