ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையால் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள் (பார்கள்) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் சகல பார்களும் திறக்கப்பட்டுள்ளன. ரெஸ்ரூரண்டுகள் திறக்கப்படவில்லை.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், அனுமதியளிக்கப்பட்ட சுப்பர் மார்கட்டுகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.