குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்படவிருந்த அவரை பிணையில் விடுவித்தமை தவறாகும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தது.
அதனையடுத்து அவரை கைது செய்யுமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.