முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவும் பாராளுமன்றத்துக்கு செல்லமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் நாட்டின் ஜனநாயகம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு இராணுவம் போடப்பட்டுள்ளது.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், அரசியலமைப்பு சபை கூட்டத்தைக்கூட கூட்டமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. அமைச்சுகளுக்கு செயலாளர்களாக, முன்னாள் இராணுவ அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பங்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.