ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்துகொண்டிருக்கின்றார் என கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு ரவி கருணாநாயக்க கோரியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
கட்சியின் பிரதித் தலைவராக பதவிவகித்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டார். இதனால் கட்சியின் வாக்குகள் சிதறும், மீண்டும் அப்பதவிக்கு அவரை நியமிக்கக் கூடாது என்றும் ரவி கருணாநாயக்க ரணிலிடம் வலியுறுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.