இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.
இதில், கடற்படையினர் 540 பேரும் ஏனைய படைகளைச் சேர்ந்தவர்கள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர்.
கடைப்படையில் பெரும்பாலானோர் வெலிசர கடற்படை முகாமில் கடமையில் இருந்தவர்கள் அல்லது அங்கு தங்கயிருந்தவர்கள் ஆவார்.
இந்நிலையில், அந்த கடற்படை முகாமிலிருந்த மேலும் 1000 சிப்பாய்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த செயற்பாடு, நேற்றும் (18) நேற்றுமுன்தினமும் (17) இடம்பெற்றுள்ளன என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்காமல் இருப்பதை தடுக்கும் வகையிலேயே அந்த கடற்படை முகாமிலிருந்து 1000 சிப்பாய்கள் ஒரே நேரத்தில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினர் ஒருவருக்கு ஒருவர் நெருங்கி பழகுவதை தடுத்துக்கும் வகையிலும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது என்றும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பிலான செய்தியை, இலங்கையிலிருந்து வெளியாகும் சிங்கள மின்னிதழ் வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.