பாராளுமன்றத்தை மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று கலைத்தமை, பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை ஒத்திவைத்தமை உள்ளிட்டவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள், நாளை (20) வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த மனுக்கள், இன்றும் நேற்றும் ஆராயப்பட்டன. ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில், இரண்டுநாட்கள் ஆராயப்பட்டன.
மனுதாரர்கள் தரப்பிலான வாதங்கள் நிறைவடையாமையால் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.