web log free
May 09, 2025

“தயங்கமாட்டேன்”- சர்வதேசத்தை எச்சரித்தார் கோத்தா

நமது போர்வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தினால், இலங்கையை அத்தகைய அமைப்புகளிலிருந்தோ அல்லது ஸ்தாபனங்களில் இருந்தோ மீளப்பெற பெற நான் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தெரிவித்தார். 

பாராளுமன்ற வளாகத்தில் சற்றுமுன்னர் நடந்த இராணுவ வெற்றிவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தங்கள் போர்வீரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்.

இதுபோன்று, எங்களைப் போன்ற ஒரு சிறிய நாட்டில், இவ்வளவு தியாகங்களை செய்த நம்முடைய போர்வீரர்கள் யாரையும் அல்லது அமைப்பையும் அவர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கவும் துன்புறுத்தவும் நான் அனுமதிக்க மாட்டேன். எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடர்ந்து நம் நாட்டையும் குறிவைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க இடமளியேன் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd