கொழும்பு-10, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்குண்டு மரணமடைந்த முஸ்லிம் பெண்கள் மூவரின் விபரம் வெளியாகியுள்ளது.
அந்த இடத்துக்கு சென்றிருந்கும் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சளா டி சில்வா, மரண பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றார்.
மரண பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை மாளிகாவத்த பொலிஸார், நீதிமன்றத்தில் முன்வைத்தனர். அதன் பின்னரே நீதவான் அவ்விடத்துக்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் கொழும்பு-10 மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட லக்சித செவனவைச் சேர்ந்த உம்மா அகிலா (62 வயது) ஜூம்மா மஸ்ஜிட் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் பௌசியா நீஷா (59) மற்றும் மாளிகாவத்தை வக்சித செவனவைச் சேர்ந்த மொஹமட் பர்மா முஸம்மில் (68) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.