வர்த்தகர் ஒருவர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு சென்றிருந்த நிலையில் அவருடைய கராஜை உடைத்து, அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்ட குற்றச்சாட்டில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிக்கவரெட்டி பிரதேசத்திலுள்ள வர்த்தகரின் கராஜிலேயே இவ்வாறு களவெடுத்துள்ளனர்.
அந்த மூவரில், ஜே.வி.பியின் நிக்கவரெட்டிய பிரதேச சபையின் உறுப்பினரும் அடங்குகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுமுறையில் வந்திருந்த கடற்படையினருடன் நெருங்கி பழக்கிய அந்த வர்த்தகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் சேர்த்து, அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே திருடியுள்ளனர்.