மலையகத்தில் ஏட்டிக்குப் போட்டியான அரசியலை செய்துகொண்டிருக்கும் கட்சிகள், தொழிற்சங்கங்களிலிருந்து மாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே செல்கிறது.
இலங்கை தொழிலாளர் தேசிய சங்கம், மலைய மக்கள் முன்னர், தமிழர் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுக்குள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கட்சி மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
அதில், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் செவனையா லெட்சுமணன் இன்று(21) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.