web log free
December 23, 2024

கொழும்பில் அனுமதித்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் பெண் ஒருவர் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அலவ்வ பகுதியை சேர்ந்த  45 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஹோமாகம பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலவ்வயிலிருந்து கொட்டாவ வந்திருந்த அவர், முச்சக்கர வண்டியில் விடுதிக்கு சென்றுள்ளார்.

நேற்றிரவு குறித்த பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் இருந்தமையால் அந்த பெண் ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்துள்ளதாக ஹோமகாமா சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த பெண் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண் தங்கியிருந்த விடுதி சட்டவிரோதமாக திறக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், அங்கு பணியாற்றிய இளைஞர் ஒருவரும் அதே இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பெண்ணுடன் நேற்று இரவு ஆண் ஒருவர் வந்திருந்ததாகவும், தற்போது அவரை கண்டுப்பிடிக்கும் நோக்கில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd