இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கான வரி, இன்று (22) முதல் 6 மாத காலத்துக்கு அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, ரின் மீன், அப்பில், பேரிச்சம்பழம், யோகட், மிளகாய் உள்ளிட்ட 26 பொருட்களுக்கே வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், இறக்குமதி செய்யப்படும் மேற்படி 26 பொருட்களுக்கான விலைகளும் அதிகரிக்கும் என இறக்குமதி வர்த்தகர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பத்தில், பருப்பு மற்றும் ரின்மீன் ஆகியவற்றுக்கு, அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தமை குறிப்பிடத்தக்கது.