வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய்கள் தனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்காக வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமும்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் 17 பஸ்களில் நேற்று இரவு 7 மணியளவில் கடற்படையினர் அழைத்து வரப்பட்டதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த முகாமைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுமார் 500 பேர் 17 பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பஸ்களை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்களைப் புகைப்படங்களை அழிக்குமாறு கூறித் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போது 17 பஸ்களும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அங்கு பதற்றநிலை காணப்பட்டது.