web log free
July 02, 2025

ஊடகத்தை இழக்கிறார் மங்கள


இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலான பரிந்துரைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில், பிரதமர் அலுவலகத்திலிருந்து, ஜனாதிபதி காரியாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, தன்னுடைய முழுமையான கவனத்தை நிதியமைச்சில் செலுத்துவார் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன, அப்பதவியை தொடர்ந்து வகிப்பார் என்றும் அறியமுடிகின்றது.

Last modified on Friday, 08 February 2019 23:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd