இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 10 பேரும், இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருக்கும் கடற்படையினரில் 10 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1078ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 660 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 409 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.