தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு சொந்தமான வாகனத்தில் ஊரடங்கு அனுமதிப் பத்திரமின்றி தமது குடும்ப உறுப்பினரை அழைத்து சென்றமை தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பொலிஸாரினால் ஆரம்பகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரத்னஜீவன் ஹூல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தனது மகளை தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்றிருந்த நிலையில், அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அதனையடுத்து, அங்கு கிருமித்தொற்று தெளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.