இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெருவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜூம்மா தொழுகையில் ஈடுபட்ட பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஒன்று கூடிதொழுகையில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, குறித்த அனைவரும் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்