பாராளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பு வருவதற்கு முன்னர், சில முன்னேற்பாடுகளை செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகிவருவதாக அறியமுடிகின்றது.
தேர்தல் தொடர்பில் அடுத்து மாதம் முதல் வாரத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.