இறக்குமதி செய்யப்படும் மாஜரின் மற்றும் பாம் ஒயில் ஆகியவற்றுக்கான வரியை அதிகரிக்கும் தீர்மானத்தின் காரணமாக , பேக்கரி உரிமையாளர்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உள்நாட்டு மாஜரின் உற்பத்தி மற்றும் அதற்கான விலையினை அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையினை அதிரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.