தேர்தல் செயற்பாட்டை முன்னகர்த்தி கொண்டு செல்லமுடியும் என்று நான் தெரிவித்திருந்ததேன் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போதைய நிலைமை நீடிக்குமாயின், இன்னும் மூன்று வாரங்களுக்கு இவ்வாறான நிலைமையிலேயே கொரோனா வைரஸின் தாக்கம் இருந்தால், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், தேர்தல் அல்ல, எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது என்றார்.
என்னுடைய இந்த அறிவிப்பை அரசியல் கோணத்தில் பார்க்காமல், உண்மையாக பாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னுடைய 30 வருட அரச சேவையில், அரசியல் பின்னால் நான் சென்றதில்லை. என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.