இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 நாட்களாக சமூகத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படவில்லை. இதன் காரணமாக சமூக மட்டத்திலான வைரஸ் பரவல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அண்மைக்காலமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வருபவர்களும், வெலிசர கடற்படையினர் மட்டத்தில் அதிகரித்த பரவல் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இன்றும் புதிய 28 கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குவைத் நாட்டிலிருந்த அழைத்து வரப்பட்டவர்கள் என சுகாதாரதுறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 674 முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதேவேளை 600 இற்கும் மேற்பட்ட கடற்படையினர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 293 கடற்படையினர் முழுமையாக குணமடைந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திரா சில்வா இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.