வெளிநாட்டில் இருந்து அழைக்கப்படும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதால் உடனடியாக கூடுதல் அளவில் இலங்கையர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகமொன்றுக்கு அவர் கூறியதாவது ,
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 52 பேரில் 49 பேர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்.இருவர் கடற்படைச் சிப்பாய்கள் , ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்.
உள்ளூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் பலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்படுவதால் பெருந்தொகையான இலங்கையர்களை ஒரேயடியாக அழைத்து வருவது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலை தொடரவேண்டும்- என்றார் அவர்
அனில் ஜாசிங்கவின் அறிவிப்பால், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பவிருக்கும் தமது உறவினர்கள் என்ன நடக்குமோ என்பது தொடர்பில், உறவினர்கள் பலரும் அதிர்ச்சியாக உள்ளனர்.