நாளை (26) முதல் நாடளாவிய ரீதியில், இரவு வேளையில் மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையிலும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இரவு 6 மணிக்கு இறுதி பஸ் புறப்படும். அதேபோல, அதிகாலை 4 மணிக்கு முதலாவது பஸ் புறப்படும் வகையில் நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களையும் தவிர, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.