கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 52 வயதான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
இருதய நோயாளியான அவர், குவைத்திலிருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தல் முகாமதில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவருடன் சேர்த்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு 1162 பேர் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.