இலங்கையின் வேக பந்து வீச்சாளர் சேஹான் மதுசங்க, 700 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஹாட்ரிக் எடுத்தபோது மதுசங்க புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
இந்நிலையில், அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.