ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சுக்களுக்கான செயலாளர்களை அண்மையில் நியமித்திருந்தார்.
அந்த செயற்பாடுகளுக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்பே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி ஜனாதிபதியால், அமைச்சுகளுக்கு பதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச அதிகாரிகளை நியமித்தல், பதவியுயர்வு வழங்குதல் சட்டவிரோதமானது ஆகும். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.