ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொள்வார்கள் எனவும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.