மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பாதாள உலக கோஷ்டி இரண்டிற்கிடையில் நீண்டகாலம் நிலவும் பகைமையின் விளைவால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
39 வயதுடைய ரவூப் என்பவரே படுகாயமடைந்துள்ளார். மாளிகாவத்தை பகுதியை சுற்றிவளைத்துள்ள இராணுவம் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.