web log free
March 30, 2026

6 பேருக்கு மேல் பயணிக்கத் தடை


பாராளுமன்றத்திலுள்ள மின்னுயர்த்திகளில் ஆறுபேருக்கு மேல் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு, அறிவுறுத்தல்களும் ஒட்டப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேவையாளர்கள், ஏனையோர் பயணிக்கும் சகல மின்னுயர்த்திகளிலும் அந்த அறிவுறுத்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சபையமர்வில் கலந்துகொள்வதற்காக, மின்னுயர்த்தியில் தாங்கள் வந்துகொண்டிருந்த போதே, இடைநடுவிலேயே அது செயலிழந்தமையால், பாரிய அசௌகரியங்களுக்கு தாங்கள் முகம் கொடுத்தோம் என்றும், சுமார் 12 உறுப்பினர்கள் 15 நிமிடங்களுக்கு மேல் சிக்கித்தவித்தோம் என்றும் விமல் வீரவன்ச எம்.பி., கடந்த வியாழக்கிழமை, சபாநாயகரின் கவனதத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து மின்னுயர்த்தியை பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு கட்டமாகவே மேற்கண்ட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd