அண்மையில் இருக்கும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உடனடியாக தம்மை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேச வாக்காளர் இடாப்பில் தம்மை பதிந்துகொள்ளாத, தற்காலிக குடியிருப்பாளர்கள் இவ்வாறு பதிவு செய்துகொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு உட்பட இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.