கொரோனா வைரஸ் தொற்று 6 அடி தூரம்தான் பரவும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று 20 அடி வரை பாயும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த ஆய்வில் கூறும்போது, ”வருகிற குளிர்காலத்தில் இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பேசுவதன் மூலம் தெறிக்கும் துளிகளில் கொரோனா பரவுகிறது. புவிஈர்ப்பு சக்தியால் அவை நிலத்தில் உதிர்ந்து விடுகின்றன. சில துளிகள் காற்றில் நீடிக்கின்றன. இவற்றால் 20 அடி தூரம் வரை நோய் தொற்று பரவக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.