மரண வீடொன்று ஏற்படுமாயின் அந்த வீட்டுக்குள்ளும் வெளியிலும் நடந்துகொள்வது தொடர்பில் பல்வேறான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மரண வீட்டில் காட் விளையாட்டு, தாம் விளையாட்டு, கெராம் விளையாடுதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலத்தை கூடிய விரைவில் புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண வீட்டில் மதுபானம் பருகுதல், புதை்தல், வெற்றிலை போடுதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மரண வீட்டுக்கு வருவோருக்கு ஏதாவது பருகுவதற்கு கொடுக்கவேண்டுமாயின் சுடசுட பருகக் கொடுக்கவேண்டும். அதுவும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கோப்பைகளை பயன்படுத்தவேண்டும். அதனை வீசிவிடவேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.