கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனாநாயக்கவை அப்பதவியிலிருந்து விலக்குவதற்கான காய்நகர்த்தைலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு கொழும்பு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 60 பேரில் 58 பேர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
இதுதொடர்பில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் ரணில் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சட்ட ஆலோசனைகள் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேயர் ரோஸி சேனாநாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்கினால், அதற்கு பதிலாக பிரதிமேயர் மொஹமட் இக்பாலை நியமிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ரோஸி சேனாநாயக்க ஒத்துழைப்பு நல்குவதில்லை என்றக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் எனவும் அதற்கு கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை நல்குவதற்கு இணங்கியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.