பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை குறிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம், இன்று (3) நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தின் போது, தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அல்லது 15ஆம் திகதியன்று தேர்தல் நடத்தப்படும்.
இதேவேளை, அரசாங்க அச்சகத் திணைக்களத்தில், தேர்தல்கள் தொடர்பிலான ஆவணங்களை அச்சிடும் பணிகள், நேற்றே தொடங்கிவிட்டன என அறியமுடிகின்றது.