மட்டக்களப்பு, ஆரையம்பதி, கோயில்குளம் பகுதியில், திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.ரமேஸ் தெரிவித்தார்.
கோயில்குளம் பகுதியில் திருமண வீடொன்றில் நேற்றிரவு சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி கலந்த புரியாணியை உணவாக உட்கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.