மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரண வீட்டுக்கு சென்றிருந்தவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனையடுத்து அவர்கள் மூவரும் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டகலை பொது சுகாதார அதிகாரி சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மூவரும் நேற்று (02) முதல் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அட்டன்-பத்தளை-தம்புள்ளையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் அவருடைய வீட்டில் இருந்தவரும் சாரதியுமே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த ஊடகவியலாளர், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பத்தரமுல்லை பிரதேசத்திலுள்ள அவருடைய வீட்டிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானிலும் வைக்கப்பட்டிருந்த போது, செய்திகளை சேகரித்துள்ளார்.
அத்துடன் நோர்வூட் மைதானத்தில் இறுதி கிரியை நடத்தப்படபோதும் அந்த ஊடகவியலாளர் செய்திகளை சேகரித்துள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதனையடுத்தே, அந்த மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனைகள் அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொட்டகலை பொது சுகாதார அதிகாரி சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.
அதுவரையிலும், அவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.