பாராளுமன்ற பொதுத் தேர்தல் திகதி இன்று (03) அறிவிக்கப்படும் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (03) நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் 8ஆம் திகதியன்று மீண்டும் கூடிய ஆராய்வோம் என்றார்.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் வழங்கவுள்ள சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள் குறைந்தபட்சம் ஜூன் 8 அல்லது 9 ஆம் திகதிக்குள் தமது விண்ணப்பங்களை வழங்கவேண்டும்.
நீதிமன்றம் தீர்ப்பு வந்துவிட்டது தேர்தல் நடத்தலாம் என்று நினைத்து நோய் நிலைமை குறித்து மக்கள் அசட்டையாக இருக்கக் கூடாது.
சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
முகக்கவசங்களை அணிந்து ஆரோக்கியமாக செயற்படவேண்டும்.அரசியல்வாதிகளும் பெரியளவில் கூட்டங்களை நடத்தக் கூடாது.
மக்களை அணிதிரட்டக் கூடாது.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தேடும் நிலைமை நீடிக்கலாம்.எனவே நாம் இவற்றுடன் வாழ நாம் பழக வேண்டும்.காணாமற்போன மாகாண சபை தேர்தலையும் நாம் நடத்த வேண்டும் என்றார்.