ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இன்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் சனிக்கிழமை அதிகாலை 4 மணிவரைக்கும் அமுல்படுத்தப்படும்.
அதன்பின்னர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலும் ஒவ்வொரு நாளும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
இன்று ஊரடங்கு சட்டத்துடன் அரச விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிறுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.