கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொழும்பில் மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உணவகங்களை திறப்பதற்காக சுகாதார ஆலோசனைகள் பலவற்றை வெளியிட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் நகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமையவே உணவகங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய செயற்பட தயார் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவகத்தில் உணவு உட்கொள்ளும் போதும், உணவை பெற்று செல்லும் போதும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பலவற்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பெருமளவானோர் ஒன்று கூடுவதனை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், மேசை மற்றும் கதிரைகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது