தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்
அதன் முதற்கட்டமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியை தனது தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.
எமது கட்சியிலிருந்து அவரை விலக்கி நீண்டகாலமாகின்றது. ஆனால் அவர் கட்சியில் தான் போட்டியிடுவதாக மக்கள் மத்தியிலே பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு அவர்களை ஏமாற்ற முற்படுகின்றார் என்றும் கருணா தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆராயப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தையல் மெசின் சின்னத்திலே இம்முறை தேர்தலில் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் போட்டியிடுகின்றதுடன் வடக்கு கிழக்கிலே யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் எமது கட்சி புத்திஜீவிகள், முன்னாள் போராளிகளை இணைத்து இந்த தேர்தல் களத்திலே நாங்கள் இறங்கியிருக்கின்றோம் என்றார்.