web log free
July 02, 2025

அமெரிக்க இராஜதந்திரி- நாமல் கடும் அதிருப்தி

அமெரிக்காவை சேர்ந்த சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளாமல் விமானநிலையத்திலிருந்து வெளியேறியமை குறித்து நாமல் ராஜபக்கச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க விமானநிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் பிடியில் உள்ள இவ்வேளையில் வியன்னா பிரகடனத்தை விட ஒத்துழைப்பும் உயிர்களை காப்பாற்றுவதற்காக நாடொன்று பின்பற்றும் கட்டமைப்பை மதிப்பதுமே முக்கியம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜதந்திரியொருவர் சோதனைகளை மேற்கொள்ளாமல் செல்வதற்கு நேற்று விமானநிலைய அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அதிகாரிகளுடன் ஆராய்ந்த பின்னரே அதிகாரிகள் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட இராஜதந்திரி இலங்கைக்கு சென்றமை இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா பிரகடனத்தின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம் இது அமெரிக்கா செல்லும் இலங்கை இராஜதந்திரிக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd