நாளை, ஜூன் 6ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்
இதுவரையிலும் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 4மணிவரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
நாளை (06) முதல் இரவு 11 மணிமுதல் மறுநாள் காலை 4 மணிவரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
கொழும்பு, கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களையும் தவிர ஏனைய மாவட்டங்களில், பொது போக்குவரத்துக்கான அனுமதி மாற்றப்படாது. அப்படியே இடம்பெறும்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் காரியாலயங்களில், அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கப்படும் போது கொரோனா நிவாரணத்துக்கான சுகாதார பரிந்துரைகள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டதைப் போல கடைப்பிடிக்குமாறு சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.