கருப்பு அல்லது நீல நிறத்திலான போல் பொயின்ட் பேனாக்களை மட்டுமே எடுத்துவருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்கு வரும்போது, வீட்டிலிருந்து பேனையை எடுத்துவதற்கு அனுமதியளிப்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
கருப்பு அல்லது நீல நிறத்திலான போல்ட் பொயின்ட் பேனைக்களை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும்.
எனினும், ஜெல் பேனையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அறிவிப்பொன்று விடுக்கப்படும்.
வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும். அத்துடன், கைகளை நன்றாக கழுவவும் வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.