தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய, காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையிலும் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாகவே நாளை, தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த ஒத்திகை நடத்தப்படும்.
அம்பலாங்கொட விலேகொட தம்மயுக்திராம விகாரையின் தர்மசாலையிலேயே இந்த ஒத்திகை நடத்தப்படும்.
இதில், 200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய தேர்தலை நடத்துவதாயின் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு கொள்ளும் வகையிலேயே இந்த ஒத்திகை நடத்தப்படவுள்ளது.
சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல்,கிருமித் தொற்றொழித்தல், தேசிய அடையாள அட்டையை கையில் பிடித்து பார்க்காமல் சுகாதார பாதுகாப்பு முறைமையை பின்பற்றல் ஆகியன கடைப்பிடிக்கப்படும்.