ஆற்றில் நீராடி கொண்டிருந்ததை 38 வயதான தந்தையும் அவருடை 12 வயதான மகளும் 13 வயதான இன்னுமொரு சிறுமியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றது.
பதுளை, மடூல்சீமை மெதவெலகம கரண்டிஎல்ல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இவ்வனர்த்தம் தொடர்பாக பசறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.