ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல சந்தியில், தனியார் பயணிகள் பஸ்ஸொன்று இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் விபத்துக்குள்ளானது.
டெம்பஸ்டோ , ஹைட்றியிலிருந்து ஹட்டன் நோக்கிவந்த ‘சிட்டிரைடர்’ ரக பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
டெம்பஸ்டோவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த குறித்த பஸ் ரொசல்ல சந்தியில் வைத்து ஹட்டன் பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்டபோதே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பின்நோக்கி சென்று குடைசாய்ந்துள்ளது.
விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்