இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் அக்கினியுடன் சங்கமமானது.
அன்னாரது அஸ்தி, மறுநாள் கொழும்பு எடுத்துவரப்பட்டு ஜயரத்ன மலர்சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கரைக்கப்படவுள்ளது.
மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் அஸ்தியும் ஜயர்தன மலர்சாலையில் வைக்கப்பட்டே, இந்தியாவுக்கு எடுத்துசெல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
தாத்தாவின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்திலேயே பேரன் ஆறுமுகன் தொண்டமானின் அஸ்தியும் கரைக்கப்படவுள்ளது.